என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கட்சி தாவல்
நீங்கள் தேடியது "கட்சி தாவல்"
கோவா சட்டசபையில் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜ.க.வுக்கு தாவியதால் ஆளும்கட்சியின் பலம் கூடியுள்ளது. #CongressMLAsJoinBJP
பனாஜி:
40 இடங்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர்.
இருப்பினும், அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. கோவா முற்போக்கு கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.
23 உறுப்பினர்களின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான அரசின் முதல் மந்திரியாக முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுபாஷ் ஷிரியோட்கர் மற்றும் தயாநந்த் சோப்டே ஆகியோர் இன்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர். #GoaCongressMLAs #CongressMLAsJoinBJP
×

X